பிரதான செய்திகள்

வவுனியா மக்களுக்கு பொது எச்சரிக்கை! டெங்கு கவனம்

வவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவருவதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்போடும் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வவுனியா நகர் பகுதியான கற்குழி, தேக்கவத்தை, வெளிவட்ட வீதியில் கடந்த வாரம் 5 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா பொது மேற்பார்வைப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மேலும் மூவர் அப்பகுதியில் டெங்கு தொற்றுக்குள்ளாகிய நிலையில் தற்போது 8 பேருக்கு அப்பகுதியில் டெங்கு நோய் இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அப்பகுதியில் உள்ள டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துச் செல்வதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொது மேற்பார்வை சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் டெங்கு தொற்று அதிகரித்து அதிகரித்துச் செல்வதாகவும் வெளிவட்ட வீதி, கற்குழி, தேக்கவத்தை போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்புக்குடம்பிகளை அழித்தொழிக்க பொதுமக்கள் முன்வரவேண்டும்.

தங்களது இருப்பிடங்களை துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளுமாறும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்கண்டால் அவ்வீட்டின் உரிமையாளருக்கு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

12 மில்லியன் மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ள அமைச்சர்! வெள்ளவத்தையில் சண்டித்தனம்.

wpengine

இந்தியா தடுப்பூசி போட்டவர்களுக்கு காச்சல்

wpengine

நட்டஈடு, உரம் வழங்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் இராஜனமா- ரொஷான் ரணசிங்க

wpengine