பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா பொலிஸ் வளாகத்தில் 16பேருக்கு கொரோனா

வவுனியா பொலிஸ் வளாகத்தில் பொலிஸ் அதிகாரிகள் 16 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா தலைமையக பொலிஸில் பணிபுரியும் மூன்று அதிகாரிகளுக்கும் மற்றும் வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும் இதற்கு முன்னர் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்தது.

இவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைக்கு அமைய குறித்த புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியா பயங்கரவாத விசாரணை பிிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு கடந்த 28 ஆம் திகதி கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் வவுனியா பொலிஸ் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தெரியவந்ததாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பொலிகண்டி நடை பவணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழைய தடை

wpengine

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

wpengine

மத்திய அரசு வழங்கும் நிதியை சரியாக பயன்படுத்த தெரியாத முதலமைச்சர்

wpengine