வவுனியாவில் வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த உருவ பொம்மைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.
வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவ பொம்மையொன்று வவுனியா ஏ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த உருவபொம்பைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊழியர்களை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதன் போது குறித்த இரு நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது அவ்விடத்திலிருந்த உருவபொம்மையினை பொலிஸார் அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.