பிரதான செய்திகள்

வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிக்கு திடீர் இடமாற்றம்!

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய விஜயமுனி சோமரத்னவிற்கு திடீர் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அவர் அவிசாவளை பகுதியில் காணப்படும் பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரியாக கடமையேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வவுனியாவில் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக அம்பலாங்கொடை பகுதி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடடையாற்றிய உயர் பொலிஸ் பரிசோதகரொருவர் பொறுப்பேற்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கள ஊடகங்களில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பில் சில விமர்சனங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வன்னியில் மூக்குடைபட்ட ஹக்கீம் மற்றும் ஹுனைஸ் பாருக்

wpengine

முன்னாள் அமைச்சர் மன்சூரின் மறைவு :அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

wpengine

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரங்கள் பிரதமரின் கீழ்

wpengine