பிரதான செய்திகள்

வவுனியா பொலிஸ் அதிகாரி போதைப்பொருள் பயன்படுத்திவுள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவரை சீருடையுடன் நேற்றையதினம் பொதுமக்கள் பிடித்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தமையினையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வைரவபுளியங்குளம் நெல் களஞ்சியசாலையில் யாருமற்ற நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சீருடையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதையடுத்து அவ்விடத்திற்கு சென்ற ஒருவர் குறித்த பொலிஸ் அதிகாரி போதைப் பொருள் பயன்படுத்தி கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், குறித்த பொலிஸ் அதிகாரியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை வவுனியா , மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தலமையிலான குழுவினர் மேற்கொண்டுவருவதுடன் விசாரணைகள் முடிவுறும் வரை குறித்த பொலிஸ் அதிகாரி தற்காலிகமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கட்டுரைப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முர்சிதா செரீன்

wpengine

YMMA பேரவையின் 66வது மாநாடு இன்று பிரதம அதிதியாக சபாநாயகர்

wpengine

கடற்றொழில் அமைச்சரை சந்தித்த வாழைச்சேனை மீனவர்கள்

wpengine