வவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள தனியார் கிளினிக் நிலையத்திற்கு வயோபதிபர் ஒருவர் சுகயீனம் காரணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு ஏற்றப்பட்ட ஊசியால் சுகயீனம் கடுமையாகி வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 30ஆம் திகதி காலை 7.45 மணியளவில் ஏகாம்பரம் சிவலிங்கம் (64 வயது) ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தை ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வருபவர்.
அவரது உடல் உறுப்பின் விதை வீக்கம் காரணமாக குருமன்காட்டிலுள்ள தனியார் கிளினிக் நிலையத்திற்கு மனைவி அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்தியரால் ஊசி ஒன்று ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதை உணர்ந்த வைத்தியர் உடனடியாக முச்சக்கரவண்டி ஒன்றில் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இதற்கான பொறுப்பினை வைத்திசாலை ஏற்றுக்கொள்ளவில்லை. வைத்தியசாலையில் உயிரிழப்பு ஏற்படவில்லை. தனியார் மருத்தவமனையில் ஏற்பட்ட ஊசியினாலேயே உயிரிழ்ப்பு நிகழ்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலையில் உடற் கூற்றுப்பரிசோதனை இடம்பெற்றுள்ளது. மருத்துவ அறிக்கை வெளிவந்த பின்னரே இதற்கான காரணம் தெரியவரும்.
எனவே தனது தந்தையின் இறப்பிற்கு முளுப் பொறுப்பையும் தனியார் மருத்துவமனையே ஏற்றுக்கொள்ள வேண்டும். தந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து வைத்தியசாலை பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.