பிரதான செய்திகள்

வவுனியா பேருந்து நிலையம் தொடரும் போராட்டம்

வவுனியா பேருந்து நிலைய விவகாரத்தில் சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் பேருந்து நிலைய வர்த்தகர்களுக்கு சார்பாக ஏனைய வர்த்தகர்களும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத்தின் தற்காலிக தலைவர் எஸ்.கிரிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வர்த்தக சங்கத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வவுனியா பேருந்து நிலைய வர்த்தகர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உள்ளூர் பேருந்து சேவையை பழைய பேருந்து நிலையத்தில் மேற்கொள்வதால் வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இது தொடர்பில் அதிகாரிகள் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இன்றைய தினம் இதற்கு ஒரு சாதகமான பதில் கிடைக்காத விடத்து ஏனைய வர்த்தகர்களும் பேருந்து நிலைய வர்த்தகர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா பழைய பேருந்து நிலையம் முதலாம் திகதி முதல் மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து நிலைய வர்த்தகர்கள் இரண்டாவது நாளாகவும் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜூன் 1 முதல், இறகுமதிக்கு தடை விதிக்கப்படவுள்ள 14 பொருட்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு!

Editor

அரசியலுக்காக சட்டரீதியான மண் அகழ்வை தடை செய்யும் மஸ்தான்

wpengine

இன்றைய ஆட்சியில் சமூகவலைத்தளம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாத ஆட்சியாளர்கள் நாமல்

wpengine