பிரதான செய்திகள்

வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சா வியாபாரம்! ஒருவர் கைது

வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து கேரள கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த நபரொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று காலை 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வவுனியா பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபரிடம் இருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி செல்ல இருந்த 45 வயதுடைய பரமசாமி ராமநாதன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் உடமையில் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு

wpengine

ராஜாங்க அமைச்சர் பதவியை எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு

wpengine

12 மில்லியன் மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ள அமைச்சர்! வெள்ளவத்தையில் சண்டித்தனம்.

wpengine