பிரதான செய்திகள்

வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்னால் பொலிஸ் பாதுகாப்பு

வவுனியா நகர பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளை மூடுமாறு வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட உள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் தற்போது பதற்ற நிலை தோன்றியுள்ளது.

வவுனியா தமிழ் இளைஞர்கள் சிலர் இணைந்து வவுனியா நகர பள்ளிவாசலிற்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு தயாராகியுள்ளனர்.

வவுனியா நகரப்பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளை உடன் மூடுமாறு வலிறுயுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், முன்னெடுக்கப்படவுள்ள குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு முரண்பாடுகள் அல்லது தாக்குதல்கள் ஏற்படும் என கருதி அப்பகுதிகளிடையே பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு அங்கு பதற்ற நிலையும் தோன்றியுள்ளது.

Related posts

பதுளை, கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Editor

21ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம்

wpengine

போரை முடிவிற்கு கொண்டு வந்த தனக்கு வரியை குறைப்பது பெரிய விடயம் கிடையாது மஹிந்த

wpengine