பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா புகையிரத கடவையில் பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை!

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில், பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களைத் தரித்து வைத்தல், புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாகப் புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் வீதி நடைமுறைகளைப் பின்பற்றாத நிலை தொடர்கிறது.

எனவே பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவதுடன் குறித்த பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கையினை உரிய தரப்பினர் மேற்கொள்வார்களா? என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related posts

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு

wpengine

ஜனாதிபதியினால் இராஜங்க,பிரதி அமைச்சர்கள் நியமனம்

wpengine

மன்னார்,முசலி விளையாட்டு கழகம் மாகாணத்திற்கு தெரிவு

wpengine