பிரதான செய்திகள்

வவுனியா பிரதேச செயலக சிறந்த பாடகர் தெரிவு

வவுனியா பிரதேச செயலக மட்டத்திலான மூத்த பிரஜைகளில் சிறந்த பாடகரைத் தெரிவு செய்யும் போட்டி நடைபெற்றுள்ளது.

குறித்த போட்டி வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

சமூக சேவைகள் அமைச்சும் முதியோர் செயலகமும் இணைந்து நாடளாவிய ரீதியில் சிறந்த பாடகரை தெரிவு செய்யும் போட்டியை நடத்தி வருகின்றன.

இந்த வகையில் செட்டிகுள பிரதேச செயலக பிரிவில் வேலுப்பிள்ளை முத்தையா வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் வேலு மகேஸ்வரனும் தெரிவாகி உள்ளனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவில் சிறந்த மூத்த பாடகராக கற்பகபுரத்தை சேர்ந்த சுப்ரமணியம் தங்கராசா தெரிவு செய்யப்பட்டார என தெரியவந்துள்ளது.

இவர்களுக்கான தெரிவுப் போட்டி இன்று மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்றது.

நடுவர்களாக பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான இசை இளவரசர் கந்தப்பு ஜெயந்தன், கிற்றார் வாத்திய கலைஞர் காந்தன் ஆகியோர் கடமையாற்றியள்ளனர்.

மேலும், மாவட்ட அலுவலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் உளவள பயிற்சியாளர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

மூத்தோர்களுக்கான வவுனியாவின் சிறந்த பாடகர் தெரிவு மாவட்ட மட்ட முதியோர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதத்தில் மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

 

Related posts

வவுனியா மாமரத்தில் தூக்கில் தொங்கிய நபர்

wpengine

மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா படுகாயம்! அவசர சிகிச்சைப்பிரிவில்

wpengine

மன்னார் பிரதேச செயலகத்தில் Covid தடுப்பு

wpengine