வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி சிறுநீரக நோயாளர்களுக்கான 1000 ரூபாய் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பொதுமக்கள், அக்கொடுப்பனவைப் பெற தபாலகம் வந்து ஏமாற்றதுடன், திரும்பிச் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சிறுநீரக நோயாளர்களுக்கு மத்திய சமூக சேவைகள் அமைச்சினால் 5000 ரூபாய் கொடுப்பனவும், மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் 1000 ரூபாய் கொடுப்பனவும் தபால் நிலையங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய சமூக சேவைகள் அமைச்சினால் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதினால், மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், பொதுமக்களுக்கு எவ்வித முன்னறிவித்தலும் வழங்காது வவுனியா பிரதேச செயலகம் கொடுப்பனவினை நிறுத்தியமையினால், அப்பணத்தைப் பெறுவதற்கு தபால் நிலையங்களுக்கு வருகை தந்த முதியவர்கள் உள்ளிட்ட சிறுநீரக நோயாளிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, கொவிட் -19 நோய்த்தாக்கம் நாட்டில் அதிகரித்து வருகின்ற சமயத்தில் பொது மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய வவுனியா பிரதேச செயலகத்தின் செயற்பாட்டிற்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.