பிரதான செய்திகள்

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு பலர் விசனம்

தபால் ஊழியர்கள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளருக்கான கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு என்பவற்றைப் பெறுவதற்கு பிரதேச செயலங்களில் முதியோர்கள் அவதிப்படுவதைக் காணமுடிகிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் 15வது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவிப்பணம் மற்றும் நோயாளருக்கான கொடும்பனவு என்பவற்றை பெற வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முதியோர்கள் மற்றும் நோயாளர்கள் வவுனியா பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இது தொடர்பில் முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
நான் இரண்டாயிரம் ரூபாய் பணம் பெறுவதற்காக ஆயிரம் ரூபாய் செலவு செய்து காலை 8 மணிக்கு பிரதேச செயலகம் வந்தேன்.

அதிக மக்கள் காரணமாக மதியம் 12 மணி ஆகியும் பணத்தை பெற முடியவில்லை. தபால் ஊழியர்கள் பணிக்கு திரும்பினால் நாம் எமது தபால் நிலையத்தில் இலகுவாக பணத்தை பெற முடியும் என தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியின் பெருநாள் வாழ்த்து!

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் தொடரும்!

Editor

வட மாகாண அமைச்சர்களை சிக்க வைக்க விக்னேஸ்வரன் விசாரணை

wpengine