பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திலீபனின் அரசியல் அடாவடித்தனம்! வவுனியா மக்கள் விசனம்

நேற்றைய தினம் வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா அருகாமையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான திலீபன் அவர்கள் மதுபோதையில் இளைஞர்களை தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியருவதாவது பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்களின் மகன் சிறுவர் பூங்காவில் நின்றிருந்த இளைஞர்களிடம் வாய்தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் முரண்பாடானது கைகலப்பாக மாறியது இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மதுபோதையில் விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் திலீபனும் அவரது சாக்களும் அங்கிருந்த இளைஞர்களை தாக்கியதுடன்  வவுனியாவை கொழுத்துவேன் என ஆக்கிரோசமாக கத்தியுள்ளார்.

இதனால் அங்கிருந்த இளைஞர்கள் பதிலுக்கு தாக்குதல் நடாத்திய நிலையில் தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல்  திலீபனும் அவரது சாக்களும் மன்னார் வீதியில் அமைத்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு சென்ற நிலையில் இவர்களை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கைகலப்பு நீண்டு சென்றுள்ளதுடன் இப்பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் சம்பவத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன் சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் ஈபிடிபி கட்சியினரின் ரவுடித்தனம்; தலைதூக்கியுள்ளதாகவும் வவுனியாவின் அமைதிநிலைக்கு குந்தகம் விளைவிக்கும் இவ்வாறன அரசியல் கட்சியினரின் கீழ்தரமான செயற்பாட்டினால் மாவட்டத்தின் பெயர் கெட்டுப்போவதாகவும் சில சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.https://www.facebook.com/252383148243057/posts/2393937944087556/

Related posts

போக்குவரத்து வேவையில் பொலிஸ் கடமையில்

wpengine

பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் அதிகூடிய வருமானம் இலங்கைக்கு

wpengine

இந்த ஆண்டிலும் ஏதாவது ஒரு தேர்தல் நடத்தப்படும்: மஹிந்த தேசப்பிரிய

wpengine