பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கழமை ( 04) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பிரகாரம் வவுனியா பல்கலைக்கழகத்தின் வாயிலிலும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்டு வந்த சில கொடுப்பனவுகள் இம்முறை வரவு செலவு திட்டத்தில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும் சம்பள உயர்வு என்ற பெயரில் தமக்கான சம்பளம் குறைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

பாடசாலை பல்கலைக்கழக வாயிலில் சுமார் 12 மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் ஒரு மணி வரை இடம்பெற்றதோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளையும் ஏந்தி இருந்தனர்.

Related posts

இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் முறையை ஆகஸ்ட் 01 திகதியுடன் நிறைவு

wpengine

இன்று வவுனியாவில் மின் தடை

wpengine

மகளிர் தினம் நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல்

wpengine