செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா நீச்சல் தடாகத்தில் முழ்கி ஒருவர் பலி ..!

வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் திங்கட்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்குத் தனது குடும்பத்துடன் சென்ற ஒருவர் நீச்சல் தடாகத்தில் இறங்கி குளித்துள்ளார். 

இதன்போது அவர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் கண்டி நாவலப்பிட்டியை சேர்ந்த 18 வயதான ஒருவரே மரணமடைந்துள்ளார். அவரது சடலம் செட்டிகுளம் பிரதேசவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மன்னார் சவூத்பார் விளையாட்டு கழகத்திற்கு நிதியினை ஒதுக்கிய அமைச்சர் றிஷாட்! நன்றி தெரிவிப்பு

wpengine

ஜனாதிபதி பதவியேற்று 10 நாட்கள்! இன்று என்ன நடக்கிறது

wpengine

பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்க அரசாங்கம் அவதானம்.

Maash