Breaking
Mon. Nov 25th, 2024

வவுனியா நகரசபை தவிசாளர், அதிகாரிகளுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் இன்று காலை பூங்கா வீதியில் காணக்கூடியதாக இருந்துள்ளது.

அத்துண்டுப்பிரசுரங்களில், வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையம் ஒன்று அத்து மீறிக் கட்டப்பட்டுள்ளதாகவும், அரச சட்டத்திற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளரிடமிருந்து பெருமளவு பணம் பெற்று அமைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு நகரசபை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வாறு சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படும் என்பதை உறுதியாக அறியத்தருவதாகவும் குறித்த வியாபார நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டு உடனடியாக அவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அத்துண்டுப்பிரசுரத்திற்கு பொதுமக்கள் நலன் அமைப்பு உரிமை கோரி வெளியிடப்பட்டுள்ளது.

அத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நகரசபை பொறுப்பு அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு,
வவுனியா பள்ளிவாசலுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையம் திறப்பதற்கு இலஞ்சம் கொடுத்து அனுமதி பெறப்பட்டு பின்புறத்தில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இது முற்றிலும் அரச சட்டத்திற்கு எதிரான செயற்பாடு இதற்கு அனுமதி வழங்கியதும் ஒத்துழைப்புக்கள், பங்களிப்புக்கள் மறைமுகமாக நகரசபை அதிகாரிகளிடமிருந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குறித்த சட்டவிரோதமான வியாபார நிலையத்தின் உரிமையாளர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவருக்கு வவுனியாவிலுள்ள நபர் ஒருவர் நகரசபை அதிகாரிகளை விலைக்கு வாங்கியதுடன் இவ்வாறான சட்டவிரோதமான செயற்பாடுகளையும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை நாங்கள் மிகவும் தாழ்மையான முறையில் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

நீங்கள் குறித்த வர்த்தக நிலையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் நாங்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து அதிகாரிகளின் முழுமையான விபரங்களையும் தகுந்த ஆதாரத்துடன் பகிரங்கமாக பொதுமக்களிடம் கொண்டு சென்று அனைவரையும் பணி செய்வது மட்டுமன்றி இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படும் என்பதை மிகவும் உறுதியாக அறியத்தருகின்றோம்.

குறித்த வர்த்தக நிலையம் உடனடியாக தனது செயற்பாடுகளை நிறுத்தி அதன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அத்துண்டுப்பிரசுரத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் போது நகரசபைச் செயலாளரினால் அப்பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்ததுடன் நகரசபைத்தவிசாளர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் நகரசபை உறுப்பினர்களும் அதற்கு எதிராக செயற்பட்டிருந்ததுடன் பலத்த எதிர்ப்பிற்குப் பின்னர் தற்காலிகமாக அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும் அவற்றிற்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *