வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக வவுனியா நகர சிறு வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,
கடந்த மாதம் வவுனியா மாவட்ட சிறு வியாபாரிகள் சங்கம் நகரசபைக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.
வீதியில் வைத்து வியாபாரம் செய்த இருவரால் முரண்பாடு ஒன்று ஏற்பட்டது.
எனினும், மறுநாள் நாம் ஐந்து பேர் கொண்ட குழு அந்த முரண்பாடு தொடர்பாக பேசுவதற்காக நகரசபைக்கு சென்றிருந்தோம். எனினும், தலைவர் எம்மை சந்திக்க முடியாது என்று கூறியிருந்தார்.
அதனால் எமது வாழ்வாதாரத்திற்காகவே ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
எமக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. அரசியல் தலையீடுகள் இன்றி சுயமாகவே அந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக சிறு வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இனிமேல் இவ்வாறு நடைபெறாது என்று கூறுவதோடு, எமக்கு வேறு தொழில்கள் தெரியாது தீபாவளி பண்டிகை நாள் வரை வீதியில் வைத்து வியாபாரம் செய்வதற்கு எமக்கு அனுமதி தரப்பட்டது. அதன் பின்னர் பல அசௌகரியங்களை சந்தித்து வருகின்றோம்.
எனவே, எமது உணர்வுகளை புரிந்துகோண்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலே எமக்கான ஒரு நிலையான வியாபார நிலையத்தை அமைத்து தருவதற்கு நகரசபை தவிசாளர் முன்வர வேண்டும் இல்லாவிடின் தற்போது வியாபாரம் மேற்கொள்ளும் இலுப்பையடி பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று வினயமாக கேட்டுகொள்வதாக மேலும் தெரிவித்தனர்