பிரதான செய்திகள்

வவுனியா நகரசபை செயலாளரின் பொறுப்பற்ற செயற்பாடு: சுகாதார சீர்கேடு

வவுனியா நகரசபைக்கு சொந்தமான மாடுகள் வெட்டும் கொல்களத்தினால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா, யாழ் வீதி, சோயோ ஒழுங்கையில் அமைந்துள்ள இக் கொல்களம் நகரசபைக்கு சொந்தமானதாக இயங்கிவருகின்ற நிலையில் குத்தகை அடிப்படையில் தனியார் ஒருவரினால் வவுனியா உட்பட கொழும்பு பிரதேசங்களுக்குமான மாடுகள் வெட்டப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் இப்பகுதி கடந்த சில நாட்களாக தூய்மை பேணப்படாமையினால் அப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் அயலில் மக்கள் வசிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.

இது தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் கேட்டபோது இது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகரிடமே கேட்டவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் இருந்து இக் கொல்களத்தை அகற்றி மக்கள் நடமாட்டமற்ற பிரதேசத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோருவதுடன் துர்நாற்றம் வீசுவதை தடுக்க நகரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவிக்கின்றர்.

Related posts

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரிக்கும் கனடாவின் வரலாறு.

Maash

உலகில் குடும்பமாக குடியேறுவதற்கு பொருத்தமான 10 நாடுகளில் இலங்கை முதல் இடம்!

Maash

வாழைச்சேனை-பிறைந்துரைச்சேனை ஹயாத்து முஹம்மட் மக்காவில் வைத்து ஜனாஷா

wpengine