பிரதான செய்திகள்

வவுனியா தொகுதி ரீதியாக மூன்றும், விகிதாசார முறையில் மூன்றும்

புதிய கலப்பு முறையிலான தேர்தல் முறைமையின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தொகுதி நிர்ணயம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மக்கள் கருத்தறியும் இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான மருத்துவர்.ப.சத்தியலிங்கம் கலந்து கொண்டு இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் தொகுதி நிர்ணயம் தொடர்பிலான பிரேரணையை முன்வைத்தார்.

இதில் வவுனியா மாவட்டம் வவுனியா தெற்கு, வவுனியா மத்தி மற்றும் வவுனியா வடக்கு என மூன்று தொகுதிகளாக பிரிக்கப்படவுள்ளது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலானது புதிய கலப்பு முறையிலானதொகுதி மற்றும் விகிசார முறையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி 50வீதம் தொகுதி அடிப்படையிலும், 50 வீதம் விகிதாசாரமுறையிலும் நடைபெறவுள்ளது.

இதன்பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் 03 பிரதிநிதிகள் தொகுதிவாரியாகவும் ஏனைய 03 பிரதிநிதிகள் விகிதாசார முறையிலும் தெரிவு செ ய்யப்படவுள்ளமை முக்கிய அம்சமாகுமென மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இதன்போது மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதனும், இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் சி.சிவசோதியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“ப்ளு வேல்” விளையாட்டின் வெளிவரும் உண்மை

wpengine

இரண்டு மாதத்திற்குள் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி

wpengine

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு வடமாகாண சபை எதும் செய்யவில்லை -TNA அன்ரன் ஜெயநாதன் ஆதங்கம்

wpengine