பிரதான செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் ஒரு கைதிக்கும் சிறைச்சாலை அதிகாரிக்கும் தட்டம்மை நோய் ஏற்பட்டதால் அதன் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறை வளாகத்திற்குள் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிக்க சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்றுடன் (07) முடிவடைய உள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
 
அதன்படி நாளை (08) முதல் வழமை போன்று அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ள சிறைச்சாலைகளுக்கு உணவு மற்றும் மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக, கைதிகள் கடும் நெருக்கடியில் உள்ளதாக கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை குறித்து அமைச்சர் றிசாட் ஆராய்வு

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட்டின் கொழும்பு விஜயம் 27ஆம் திகதி

wpengine

வட, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – உதுமாலெவ்வை

wpengine