Breaking
Sat. Nov 23rd, 2024

ஆயிரம் பாலம் திட்டத்தின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாலம்பகுளம் பாலம் மக்கள் பாவனைக்காக கடந்த 18.07.2017 செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பாலமானது கிராமிய பாலங்கள் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டதென்பதுடன் கடந்த வருடம் ஆனி மாதம் மேற்குறிப்பிட்ட கிராமத்திற்கு வடமாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் கௌரவ ஜி .ரி. லிங்கநாதன் மற்றும் கௌரவ செ. மயூரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக  அமைச்சர் அவர்களும், அதிகாரிகளும் குறிப்பிட்ட உமா மகேஸ்வரன் வீதியில் இருக்கின்ற சமளங்குளம் என்ற இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்தனர்.

குறிப்பாக மழை காலங்களில் குளத்தில் இருந்து குளத்தின் வான் பகுதி வழியாக வழிந்தோடுகின்ற நீரினால் குறித்த இடத்தில் ஏறக்குறைய மூன்று அடி அளவிற்கு தண்ணீர் வீதியை குறுக்கறுத்து ஓடுவதனால் இந்த வீதியை பயன்படுத்தும் கோயில்குளம், சமளங்குளம், சிதம்பரபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 7000 குடும்பங்களின் போக்குவரத்து தடைப்படுவதுடன் பல்வேறு அசெளகரியங்களுக்கும் ஆளாகின்றனர் என அமைச்சர் அவர்களுக்கு குறிப்பிட்ட தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே குறித்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் அவர்கள் எதிர்வரும் வருடத்தில் முன்னெடுக்க உத்தேசித்துள்ள “கிராமிய ஆயிரம் பாலம்” திட்டத்தின் கீழ் சமளங்குளம் பாலத்தையும் உள்வங்குமாறு வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளருக்கு பணித்திருந்தார். அதற்கு அமைவாக குறித்த பாலம் 22 மீற்றர் நீளம், 5 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டு மக்களின் போக்குவரத்து இலகு படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் அவர்கள், வட மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ப. சத்தியலிங்கம், வட மாகாண மீன்பிடி அமைச்சர் கௌரவ பா. டெனிஸ்வரன், வட மாகான சபை உறுப்பினர்கள் கௌரவ ஜி. ரி. லிங்கநாதன், கௌரவ செ. மயூரன், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *