பிரதான செய்திகள்

வவுனியா கோவில்குளம் சிவன் கும்பாபிஷேக! அரசாங்க தலைமையில் கூட்டம்.

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இம்மாதம் 24ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேக நிகழ்வு ஏற்பாட்டுக்கான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.


குறித்த கலந்துரையாடல் மாவட்ட அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளின் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆயத்த முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்புக்களும் உரிய தரப்புக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இதன்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் ஆரயப்பட்டுள்ளது.
மின்சாரம் வழங்கும் முறைகள் சுகாதார நடைமுறைகள், ஊடகம் ஒளிபரப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.


வவுனியா சிவன் ஆலயத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேகம் நிகழ்வுகள் இவ்வருடம் 3ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது.


இக் கலந்துரையாடலின் போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுகாதார உத்தியோகத்தர்கள், மாவட்ட கலாச்சார அலுவலகர், உதவி பிரதேச செயலாளர், மின்சார சபை அதிகாரி, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆலய நிர்வாக தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

ஞானசார தேரரை ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான சுமங்கல தேரர் ஏன்? பாதுகாக்க வேண்டும்?

wpengine

சினோபெக்கின் முதலாவது எரிபொருள் தொகை அடுத்த மாதம் நாட்டிற்கு!

Editor

மன்னார் பிரதேச சபை ஒரு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

wpengine