பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா கூட்டத்தில் மொட்டுக்கட்சி உறுப்பினர்களினால் வாங்கிகட்டிய கா.மஸ்தான்

பொதுஜன பெரமூன கட்சியின் 4வது ஆண்டு நிறைவு தொடர்பான கூட்டம் நேற்று (1) மாலை வவுனியாவை நடைபெற்றது.


இதன் போது மொட்டுக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் மஸ்தானின் நடவடிக்கை பற்றி கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார்கள்.


குறிப்பாக மஸ்தான் சுதந்தர கட்சியில் இருக்கின்றார் என்றும்,கட்சிக்கு இன்று வந்துவிட்டு மொட்சி கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களின் ஆலோசனையினை கருத்தில் கொள்ளாமல் சுயநலமான முறையில் நடந்துகொள்ளுகின்றார் எனவும்,தொழில் வாய்ப்பு வழங்கும் நடைமுறையில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் வழங்கி வருகின்றார்கள் எனவும்,பல விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.


மொட்டுகட்சியின் ஆதரவாளர்களின் கருத்துக்கு பதில் கொடுக்க முடியாமல் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைகுனிந்தவராக இருந்தாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Related posts

மஹிந்த அரநாயகவுக்கு விஜயம் (படம்)

wpengine

முன்னாள் ஜனாதிபதி அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு !

wpengine

முல்லைத்தீவு பகுதியில் முறுகல் நிலை! மக்கள் போராட்டம்

wpengine