பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா குளத்தில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்.!

வவுனியா, இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று (01.04) மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக அயலவர்கள் நெளுக்குளம் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேறகொண்டுள்ளனர்.

சடலத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் சேட் ஒன்றும் காணப்படுவதுடன், குறித்த சடலம் ஐந்து தொடக்கம் பத்து நாட்களுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுகின்றது.

தடவியல் பொலிசாரின் உதவியுடன் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பதில் நீதவான் த.ஆர்த்தி அவர்களும் சடலத்தை பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

Related posts

முல்லைத்தீவில் குடும்பத் தகராற்றில் தந்தையால் வெட்டப்பட்ட சிறுமி

wpengine

உறவை புதுபிக்க ரஷ்யாவிடம் மன்னிப்பு கோர உள்ள தையிப் அர்துகான்

wpengine

விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் சவால்

wpengine