Breaking
Sun. Nov 24th, 2024

பல தசாப்தங்களாக இருந்துவரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். பிரதேச பாடசாலை ஆசிரியர் பிரச்சினைகளை தீர்க்கும் அவர் பணிப்புரை வழங்கினார்.

வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவின் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் கலந்துரையாடல்” 17வது நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் நீர் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் முன்வைத்த கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி, பல தசாப்தங்களாக இருந்துவரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மாவட்டத்தின் சனத்தொகையில் 92வீதமானவர்கள் குடிநீர்ப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். துரித கருத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் நீர்வழங்கல் முன்மொழிவு முறைக்காக 60பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் அனைத்து குழாய் கிணறுகளையும் புனரமைத்தல் பல சமூக நீர்த்திட்டங்களை ஆரம்பித்தல் ஆகியவற்றை உடனடி தீர்வாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *