பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா கிராம சேவையாளர் லஞ்சம்! ஆணைக்குழு கைது

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவலர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, கோவில்குளம் கிராம அலுவலர் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கிராம அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கிராம அலுவலர் லஞ்சம் பெற்ற நிலையிலேயே கோவில்குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த கிராம அலுவலர் தொடர்பில் அவர் பணியாற்றிய பல்வேறு இடங்களிலும் இருந்தும் பல முறைப்பாடுகள் கடந்த காலங்களில் வவுனியா பிரதேச செயலகத்தில் செய்யப்பட்ட போதும், அவருக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படாது தொடர்ச்சியாக முறைப்பாடுகளையடுத்து இடமாற்றங்களே வழங்கப்பட்டு வந்திருந்த நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் குறித்த கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்-கல்வி தவிர்ந்த அனைத்து விடயங்களுக்கும் தடை! அரசாங்க அதிபர்

wpengine

மு.காவின் யாப்பு மாற்றம் செல்லுமா?

wpengine

தொழில் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை

wpengine