பிரதான செய்திகள்

வவுனியா கிணற்றில் சடலமான 5 பிள்ளையின் தாய்

வவுனியா, நெளுக்குளம் சாம்பல் தோட்டத்தில்  ஜந்து பிள்ளைகளின் தாய் இன்று  காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ஜந்து பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய தியாகராசா நகுலேஸ்வரி என்பவர் காலை கிணற்றிக்கு அருகே நின்றுள்ளார். சற்று நேரத்தின்  பின்னர் அவரை காணாத பிள்ளைகள், தாயை காணவில்லை என தேடிய சமயத்தில் கிணற்றிலிருந்து சடலமாக இருந்துள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.

மீட்டெடுக்கப்பட்ட சடலம் பொலிஸாரின் அறிவுறுத்தலின் போரில் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.

 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கையில் சிறுநீரக நோயை ஒழிக்க கியூபா, எல்சல்வடோர் ஒத்துழைப்பு

wpengine

ரவிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை! சம்பிக்கை குறித்து இன்று ஆராய்வு

wpengine

முசலி பிரதேச கர்ப்பிணி தாய்மார்களுக்கான முத்திரையில் மோசடி ! பலர் விசனம்

wpengine