செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா ஓமந்தை பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

குறித்த குடும்பஸ்தர் இன்றையதினம் காலை தனது வீட்டில் உள்ள காற்று அழுத்தும் இயந்திரம் மூலமாக முச்சக்கர வண்டியை சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்த போது தவறுதலாக மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச் சம்பவத்தில் பன்றிக்கெய்தகுளம் பகுதியை சேர்ந்த 50 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

2020ஆம் ஆண்டு பொதுஜன பெரமுன அதிகமான ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெறும்.

wpengine

தகவல்களை வழங்குவதில் பின்னடிக்கும் பிரதேச செயலகம்

wpengine

யாழில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

Editor