பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா, ஓமந்தை பகுதியில் ரயிலில் மோதி 16 எருமைகள் பலி!

வவுனியா, ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை கடுகதி ரயிலில், இன்று காலை மோதுண்டு பலியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில், ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியது.

இதன் காரணமாக பல இலட்சம் பெறுமதியாக 16 எருமை மாடுகள் குறித்த இடத்திலேயே பலியாகியுள்ளது. 

வவுனியா மாவட்டத்தில் மேச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேச்சலுக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவை வீதியோரங்கள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில், இரை தேடி வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ரயிலேயே திருநாவல்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் மோதியமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

மஹிந்த அணி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

wpengine

ஒரு இலட்சத்தை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் SI கைது!!!

Maash

போதைப்பொருள் கடத்தல்! உரியவர்களின் சொத்து முடக்கப்படும்.

wpengine