பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா ஒருங்கிணைப்பு கூட்டம்! முஸ்லிம் இணைக்குழு தலைவர்கள் கலந்துகொள்ள வில்லை

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த கூட்டம், இன்று காலை வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

தற்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடைபெற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், நகரசபை செயலாளர் ஆர். தயாபரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் சுகந்தி கிஷோர் , உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சனா, சமுதாய அடிப்படை வங்கி பிரதேச பணிப்பாளர், கிராம சேவையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் கா.உதயராசா,
வவுனியா பிரதேச செயலகத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக தகவல் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதில் கோரப்படும் தகவல்கள் அதிகளவானவை பொது நோக்கத்திற்குரியதாக காணப்படுவதில்லை. பொது நோக்கத்திற்குரிய தகவலைக் கோரினால் அவற்றை இலகுவாக வழங்கக்கூடியதாக இருக்கும்.
எனது செயலகத்தில் மிகப் பெரிய இரகசிய தகவல்களுடைய தகவல்கள் எவையும் இல்லை. செயலகத்தில் வேலைப்பழு அதிகமாக காணப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் பொது நோக்கத்தின் தேவைகளைக் கோரினால் அதை வழங்கத் தயாராக இருப்பதாகவும் பிரதேச செயலாளர் கா.உதயராசா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனை

wpengine

நாமல் எதாவது பிரச்சினையா? மைத்திரி கேள்வி!

wpengine

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!

Editor