பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்! றிஷாட்,விக்கி பங்கேற்பு

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு  கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார் தலைமையில் ஆரம்பமாகியது.

 

இக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண கல்வி அமைச்சர் ச.சர்வேஸ்வரன், வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர்கான ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலக, மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் கடந்த கூட்டத்தொடரில் கவனத்திற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் என்பன கலந்துரையாடப்பட்டதுடன் அவை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.

 

Related posts

“கடிதம் எனக்கு கிடைத்துள்ளது” .லசந்த படுகொலை தொடர்பில் புதிய விசாரணை. பிரதமர் ஹரிணி அமரசூரிய

Maash

மக்களுக்குச்சொந்தமான காணிகளை அபகரித்து தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக அரசபடைகள்.!

Maash

ஒன்றுகூடஉள்ள 4 முன்னாள் ஜனாதிபதிகள் ..!

Maash