பிரதான செய்திகள்

வவுனியா உள்ளூராட்சி சபைகளின் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா மாவட்டத்தின் நகரசபை உள்ளிட்ட 5 உள்ளூராட்சி சபைகளின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று காலை 8 மணியிலிருந்து 10 மணி வரையும் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த வாரம் வவுனியா நகரசபை தலைவர் மீது வவுனியா சிறைச்சாலையின் பாதுகாவலர் ஒருவர் தாக்க முற்பட்டிருந்தார். இது தொடர்பில் நகரசபை தலைவரால் முறைப்பாடு செய்யப்பட்ட போது அவரது பதவிநிலை அவர் அவமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இவ் அநீதிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் குறித்த சிறைப் பாதுகாவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் இரண்டு மணிநேரம் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு ஆதரவாக செட்டிகுளம் பிரதேச சபை, நெடுங்கேணி பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, சிங்கள பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் தமது ஆதரவினை வழங்கி இரண்டு மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Related posts

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர் சுமந்திரனும், சாணக்கியனும்!

wpengine

கொழுப்பை நீக்க மருந்து! உடற்பயிற்சி தேவையில்லை

wpengine

சட்டத்தரணியாக முஷாரப் சத்தியப்பிரமாணம்

wpengine