பிரதான செய்திகள்

வவுனியா அல்-மதார் விளையாட்டு கழகத்திற்கு உபகரணம் வழங்கி வைத்த றிப்ஹான் பதியுதீன்

வவுனியா அல்-மதார் விளையாட்டுக்கழகத்திற்கு உதைப்பந்தாட்ட பாதணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை வடமாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன் இன்று வழங்கி வைத்தார்.


அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த றிப்கான் பதியுதீன் வீரர்கள் உண்மையில்” இன்றைய காலகட்டத்தில் வறுமையில் இருக்கின்ற சில இளைஞர்கள் சிறந்த வீரர்களாக இருந்தும் போதியளவு வசதியின்மை காரணத்தினால் அவர்களுடைய திறமைகள் வெளிக்கொண்டு வராமல்  இருக்கின்றது.

அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் இந்த நாட்டிற்கு எவ்வாறு பல உதவிகளை செய்கின்றார்களோ அதே போன்று இளைஞர்களாகிய உங்களுக்கும் என்னால் இயன்ற இன்னும் பல உதவிகளை  செய்ய உள்ளேன் எனவும் தெரிவித்தார்.

விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்த மாகாண சபை உறுப்பினருக்கு கழகம் சார்பாக அனைவரும் நன்றிகளையும் தெரிவித்தார்கள்.

இன் நிகழ்வில் வவுனியா நகர சபையின் முன்னால் உறுப்பினர் அப்துல் பாரியும் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Related posts

அபாயா அணிந்த முஸ்லிம் பெண் உழியர்களுக்கு புடவை கட்டிபார்த்த மன்னார் மாவட்ட செயலகம்

wpengine

மன்னார்,நானாட்டான் பகுதியில் விபத்து! பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

wpengine

மூத்த கலைஞரும், ஒலிபரப்பாளருமான விமல் சொக்கநாதன் காலமானார்!

Editor