செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியாவில் 15 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது ..!

வவுனியாவில் 15 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் வியாழக்கிழமை (03) தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, கணேசபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அதனை உடமையில் வைத்திருந்த கணேசபுரம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 – 32 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.  

கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நெளுக்குளம் பொலிஸாரிடம் விசேட அதிடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்  தெரிவித்தனர். 

Related posts

அவசரமாக சிறுநீரகம் தேவை! உடனடியாக தொடர்பு கொள்ளவும்

wpengine

ரணிலுக்கு காலத்தை வழங்கி பார்ப்போம்! இல்லை என்றால் விரட்டுவோம் எஸ்.எம்.சந்திரசேன

wpengine

இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாதம்.

wpengine