பிரதான செய்திகள்

வவுனியாவில் வைத்தியசாலைக்கு அருகில் கேரள கஞ்சா

வவுனியாவில், கேரள கஞ்சா வைத்திருந்த பெண் ஒருவரை நேற்றைய தினம் போதை ஒழிப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியாவில் வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த பெண்ணை சோதனையிட்டபோது அவரது கைப்பையில் இருந்து கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பெண்ணின் கைப் பையினுள் பொதி செய்யப்பட்ட 200 கிராம் கேளரா கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

அபிவிருத்தி திட்டங்கள் இரண்டு மாதகாலத்தில் நிறைவு செய்ய வேண்டும் -அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

வட மாகாண அமைச்சர்கள் எதை செய்யப்போகின்றார்!இந்த நிலையில் செயலாளர் கோரிக்கை

wpengine

ஜனவரி – ஏப்ரல் 8 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 564பேர் பலி!

Editor