பிரதான செய்திகள்

வவுனியாவில் விக்னேஸ்வரன்,சத்தியலிங்கம் மோதல்

வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோதலை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் வருகைதந்துள்ளதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

wpengine

கெய்லின் சாதனை முறியடிப்பு

wpengine

சிங்கராஜவனத்தை பாதுகாக்க V-FORCE தன்னார்வத் தொண்டர் படையணி

wpengine