பிரதான செய்திகள்

வவுனியாவில் 50மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய அரசாங்க அதிபர்

வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயம் க.பொ.த உயர்தரம் 1998ஆம் ஆண்டு கல்வி கற்ற பாடசாலையின் பழைய மாணவர்களின் நம்பிக்கை நிதியத்தினால் வசதியற்ற 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று உதவி மாவட்ட செயலாளர் த.கமலதாசன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட வசதியற்ற நிலையில் வசித்து வரும் மாணவர்கள் 50 பேருக்கு ஒருவருக்கு தலா 3000 ரூபாய் பெறுமதியில் மொத்தமாக 150,000 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜ.முகமட் ஹனீபா, நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஆர்.பிரசன்னா, நம்பிக்கை நிதியத்தின் செயலாளர் ஆர்.அமலன், மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் யோ.ஜெயக்கெனடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

கொரோனா தடுப்பு உத்தியோகத்தர்கள் நியமனம்

wpengine

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல்

wpengine

ஜனாதிபதி பதவியேற்று 10 நாட்கள்! இன்று என்ன நடக்கிறது

wpengine