பிரதான செய்திகள்

வவுனியாவில் மோதல்! கடை சேதம்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு நெச்சிமோட்டை பகுதிக்கு வந்த புதிய சின்னக்குளத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்ததுடன் கடை உரிமையாளரையும் தாக்கியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

கடந்த சனிக்கிழமை புதிய சின்னக்குளத்தை சேர்ந்த இளைஞனொருவரை சிலர் தாக்கியதில் குறித்த இளைஞர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் குறித்த இளைஞனை தாக்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கையை பொலிஸார் எடுக்கவில்லை என புதியசின்னக்குளத்தை சேர்ந்தவர்கள் நொச்சிமோட்டை பகுதிக்கு வந்துள்ளனர்.

இதன்போது குறித்த கடையின் உரிமையாளரும் இணைந்தே இவ் இளைஞனை தாக்கியதாக தெரிவித்து அங்கு கூடியவர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து கடை உரிமையாளரும் அங்கிருந்தவர்களும் பொலிஸாருக்கு தகவல் வழங்கவே அப்பகுதியில் கூடிய புதிய சின்னக்குளத்தை சேர்ந்தவர்கள் அவ்விடத்தினை விட்டு அகன்றுள்ளனர்.

இந் நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் அப்பிரசேத்தில் தேடுதலை நடத்தியதுடன் சம்பவம் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.

இதேவேளை பொலிஸில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டபோதிலும் மீண்டும் இரு கிராமத்தவர்களுக்கும் முறுகல் நிலை தொடர்ந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊடகவியலாளர்களுக்கான முதலாவது இப்தார் நிகழ்வு

wpengine

கோழி இறைச்சி தயாரிப்பு : நவீன கோழி குஞ்சுபொறிப்பகத்துடன் டெல்மோ மெருகேற்றம்

wpengine

எதிர்வரும் திங்கள் கிழமை அரச விடுமுறை

wpengine