பிரதான செய்திகள்

வவுனியாவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வேட்புமனு

வவுனியா மாவட்டத்தின் ஐந்து சபைகளிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது.

கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மாஹிர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள மாஹிர்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது கட்சியில் வெற்றியீட்டி தெரிவானவர்கள்தான். இவர்கள் கட்சியில் சலுகைகளை எதிர்பார்த்தனர்.

ஆனால், அவை கிடைக்கவில்லை, இதனால், கட்சியை விட்டு வெளியேறி கூட்டு சேருவதாகவும், இது எமக்கு புதிதல்ல ,நாம் தனித்து வெல்வோம் எனவும் மாஹிர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்ய பிடியாணை

wpengine

உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியிட தொடர்ந்தும் தாமதம்

wpengine

பசிலின் வருகையின் பின்பு விமல்,கம்மன்பிலவின் துறைகள் பறிபோகும்

wpengine