பிரதான செய்திகள்

வவுனியாவில் மாட்டிக்கொண்ட சங்கிலி திருடன்

வவுனியா – தாண்டிக்குளம் ஐயனார் கோவில் அருகில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரிக்க முற்பட்ட இரு இளைஞர்களை மக்கள் துரத்திப் பிடித்துள்ளனர்.

குறித்த சம்பம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வயோதிப பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரிக்க முற்பட்ட அவர்கள் இருவரையும் அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படும் மோட்டார் சைக்கிளையும், சந்தேநபர்கள் இருவரையும் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

4,5ஆம் திகதி மாலை நாடுமுழுவதும் ஊரடங்கு

wpengine

அமைச்சர் ஹக்கீம், றிசாட் சிலாவத்துறை மக்கள் வங்கியில் ATM மெசின் பொருத்தப்படுமா?

wpengine

கிளிநொச்சியில் கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளை

wpengine