பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் மனித உரிமைகள் நிகழ்வு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் இன்றைய தினம் மனித உரிமைகள் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா கிராம அபிவிருத்தித் திணைக்கள கேட்போர் கூடத்தில் குறித்த தெளிவூட்டல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் சட்டத்தரணி ஆர். எல்.வசந்தராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின்போது,

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கிருபாகரன், வவுனியா பிரதேச செலயாளர் .கா.உதயராசா, வடமாகாண சமூகசேவைகள் பணிப்பாளர் வனஜா, சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், சமுதாய பிரிவினர், மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Related posts

டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழப்பு . .!

Maash

சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்” -2016 (பேர்ண் மாநிலத்தில்)

wpengine

விடைபெறும் முதலமைச்சர்

wpengine