பிரதான செய்திகள்

வவுனியாவில் புதிதாக பியர் விற்பனை நிலையம்! மக்கள் விசனம்

வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று திடீரென புதிதாக பியர் விற்பனை நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டதனால் அப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே வடக்கை பொறுத்தவரையிலே வவுனியாவில் அதிகமான மதுபான விற்பனை நிலையங்கள் இருப்பதாக பொது அமைப்புக்களும் , பெண்கள் நலன் சார்ந்த அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்ற நிலையிலே புதிய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று திறந்து வைக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற காலம் தொடக்கம் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்று கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ள நிலையில் ஏற்கனவே பழைய பஸ் நிலையத்திற்கு அருகாமையில் இயங்கி வந்த பழைய மதுபானசாலையின் அனுமதி பத்திரத்தை வைத்து கொண்டு புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக திறந்திருப்பதென்பது ஏற்கனவே போதிய வசதிகளற்ற சன நெருக்கடியான நிலையில் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாகவும் அதைவிடவும் அம்மாச்சி பாரம்பரிய உணவகத்திற்கு முன்பாக இந்த மதுபானசாலை திறந்து வைத்திருப்பது என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக அப் பகுதியில் வசிக்கின்ற மக்கள் தங்களுக்கு இந்த மதுபானசாலை அமைந்தது தொடர்பில் எந்தவிதமான உடன்பாடும் இல்லை எனவும் இது நமது கலாச்சாரத்தையும், தமது இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும் எனவும் பியரை வாங்கியவர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாகவோ அல்லது ஒழுங்கைகளுக்கு முன்பாகவோ குடித்துவிட்டு அதனை வீடுகளுக்கு வீசுவதற்கும், சமூக சீர்கேடுகளுக்கும் சாத்தியம் இருப்பதாகவும் இவ் விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதியில் சூழ்ந்திருந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அதற்கான எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லையெனவும் ஏற்கனவே இருந்த மதுபானசாலை மட்டுமே புதுப்பிப்பதற்கான அனுமதிக்கப்பட்டதாகவும் அதற்கான அனுமதி வழங்கவில்லை.

இது தொடர்பாக நாளையதினம் வேலை நாளான திங்கள்கிழமை இது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

65 ஆயிரம் வீடுகள் திட்டத்துக்கு தடங்கல் இல்லை: அமைச்சர் சுவாமிநாதன்

wpengine

வட மாகாண முஸ்லிம் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்

wpengine

26 ஒசுசல அரச மருந்தகங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபா நஷ்டம்!

Editor