Breaking
Tue. Nov 26th, 2024

வவுனியா, தாண்டிக்குளத்தில் பாதுகாப்பான புகையிரதக் கடவையை அமைத்துத் தருமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, தாண்டிக்குளத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் முச்சக்கரவண்டி புகையிரதத்துடன் மோதுண்டு அண்மையில் நபர் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவையொன்றினை அமைத்து தருமாறு மக்கள் புகையிரதத்தினை மறித்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டிருந்ததோடு பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

குறித்த புகையிரதக் கடவையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துவதற்கு மூவரது பெயரை கிராம மக்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் அவர்களை தற்காலிகமாக பாதுகாப்புக் கடமைக்கு நியமிப்பதாக பொலிஸார் வழங்கிய வாக்குறுதியை அடுத்து மக்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் நேற்றைய தினம் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது புகையிரதக் கடவையில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் வீதி சமிக்ஞையின் ஒளி மற்றும் ஒலி தொடர்பான விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

 

மேலும், தற்காலிக கடமையில் ஈடுபடுவோரின் பெயர்களை சிவில் பாதுகாப்பு குழுவின் கடிதத் தலைப்பில் பொலிஸாரிடம் வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலின் போது வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், புகையிரத திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *