பிரதான செய்திகள்

வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோகம்! இருவர் கைது

வவுனியாவில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு கணேசபுரம் மரக்காரம்பளையிலுள்ள தனது வீட்டிற்கு தனிமையில் சென்றுள்ளார்.

இதன்போது முச்சக்கரவண்டியில் வந்த இரு இளைஞர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதுடன், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், அந்த பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 19 மற்றும் 20 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related posts

ஸ்நாப்சாட் நிறுவனத்திற்கு 3000 கோடி டாலர்கள்: தோல்வியடைந்த கூகுள் முயற்சி

wpengine

அநுர திஸாநாயக்கவுக்கு பதில் அடி கொடுக்கும் அமைச்சர் சுவாமிநாதன்

wpengine

கல்வியல் கல்லூரி நியமனத்தில் மு.கா மக்களை ஏமாற்றுகிறதா?

wpengine