பிரதான செய்திகள்

வவுனியாவில் நடைபெறவுள்ள, “புளொட்டின்” 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்.

( ஊடகப்பிரிவு)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் எதிர்வரும் 13ம்திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக “புளொட்” அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது.

27ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகளாக எதிர்வரும் 13ஆம் திகதி வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் மௌன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது.

இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான 16ம்திகதி அன்று செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்படுவதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.10200331-eb5b-4942-814b-4d57b94aa75a

Related posts

Colombo D.S. Senayake College celeberated Internationl Mother Language Day – chief guest state minster education Ratha krishnan

wpengine

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு!

wpengine

பேஸ்புக் தொடர்பில் புதிய நடைமுறை

wpengine