பிரதான செய்திகள்

வவுனியாவில் தேர்தல் கால கோரிக்கையினை நிறைவேற்றிய அமைச்சர் றிஷாட்!

(ஊடகப்பிரிவு)

வவுனியா மாவட்ட தமிழ் பிரதேங்களில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 8 சிறு ஆடைத்தொழிற்சாலைகளை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வழங்கியுள்ளார்.

இளைஞர் யுவதிகளின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் அமைச்சரின் வேலைத்திட்டத்திற்கமைய வவுனியா தெற்கு இலுப்பைக்குளம், கூமாங்குளம், நெளுக்குளம், சமயபுரம், மகிழங்குளம், அண்ணா நகர், புளியங்குளம் (வவுனியா வடக்கு) ஆகிய கிராமங்களிலுள்ள யுவதிகள் பயன்பெறும் வகையிலேயே முதற்கட்டமாக 5 நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஏனைய 3நிலையங்களும் வெகுவிரையில் திறந்து வைகப்படவுள்ளது.

தேர்தல் காலங்களில் அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குறித்த சிறுஆடைத்தொழிற்சாலைகளுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்ட்டு ஆறு மாத கால இலவச பயிற்சியுடன் குறித்த ஆடைத்தொழிற்சாலை இயங்கவுள்ளது.

இவ்வங்குரார்ப்பண நிகழ்வுகளில் அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ.எஸ்.எம்.மொகைதீன், மாவட்ட இணைப்பாளர்களான முத்து முஹம்மட், அப்துல் பாரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜோர்ஜ், அமைச்சரின் தமிழ் பிரதேச இணைப்பாளர் ஆனந்தன், மகளிர் பிரிவைச் சேர்ந்த ஜிப்ரியா, கனஹா மற்றும் குறித்த கிராமங்களின் முக்கிய பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

Related posts

மன்னார் இ.போ.ச யின் பொறியியல் பிரிவின் அசமந்த போக்கு! மக்கள் அவதி

wpengine

தமிழ் அரசியல் கைதிகளை பலிகொடுத்துவிடாதீர்கள்

wpengine

வவுனியா பொலிஸ் பொம்மைக்கு லஞ்சம் வழங்கிய நபர்

wpengine