பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட மாநாடு

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட மாநாடு, மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளது.


வன்னி மாவட்ட அமைப்பாளரும், வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினருமான உப்பாலி சமரசங்க தலைமையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.


இதன்போது மக்கள் மத்தியில் சிறந்த சக்தியை கட்டியெழுப்பும் செயற்பாடுகள், இலங்கையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


இதில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

ஹக்கீமின் தேசியப்பட்டியல் மந்திர முடிச்சு

wpengine

மன்னார்-கட்டுக்கரையில் சடலம்

wpengine

உழைக்கும் மக்களின் பணத்திற்கான பிரதிபலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்-அநுர குமார திசாநாயக்க

wpengine