பிரதான செய்திகள்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய இளைஞன்! காரணம் வெளிவரவில்லை

வவுனியா – மில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வங்கி ஊழியரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம்(21) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் அரச வங்கியொன்றில் பணிபுரியும் வவுனியாவை சேர்ந்த கிருபராசா ஜேசுதாஸ் (வயது- 33) என்பவர் நேற்றையதினம் வவுனியாவிற்கு வந்துள்ளார்.

நண்பர்களுடன்  மாலை கதைத்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன் இரவு வீட்டில் அனைவரும் தேவாலயத்திற்கு சென்ற சமயத்தில் கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு திரும்பிய சமயத்தில் ஓர் அறையில் கடிதமும் இன்னொரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலும் இளைஞன் காணப்பட்டதாகவும், அதனையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தற்போது குறித்த நபரின் வீட்டில் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் பரந்தாமன் இரங்கல்

wpengine

மன்னாரில் ஆட்டோ விபத்து

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள் ..!

Maash