பிரதான செய்திகள்

வவுனியாவில் தாக்கப்பட்ட மாதா சொரூபம்

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கன்னி மாதா சொரூபம் அடையாளம் தெரியாத விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் அமைந்திருந்த அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சொரூபம் உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் விசமிகள் எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

இதனால் மாதா சொரூபம் சேதமடைந்துள்ளதுடன், கண்ணாடிப் பெட்டியும் சிதைவடைந்துள்ளது.
இந்த நிலையில் மாதா சொரூபம் எரிவதைக் கண்டு அதனை தண்ணீர் ஊற்றி அனைத்ததாகவும், அப்பகுதியில் இருந்து மோட்டர் சைக்கிள் ஒன்று சென்ற சத்தம் கேட்டதாகவும் அப்பகுதியில் வசிப்பவர்கள்
தமது வாக்குமூலத்தில்
தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பேஸ்புக் விளம்பரம் இந்தியாவில் வழக்கு பதிவு

wpengine

பிரபாகரனின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம்! வவுனியா,யாழ் வளாகம் மூடப்பட்டுள்ளது.

wpengine

அமைச்சரின் வெள்ளிமலை விஜயம்

wpengine